கோவில்பட்டியில் காவல்துறை சார்பாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி 2021 ஜனவரி 21 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டம் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் காவல்துறை சார்பாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18.01.2021 முதல், தினந்தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இன்று (23.01.2021) கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வாக தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் கோவில்பட்டி நேஷனல் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் புறப்பட்டு கதிரேசன் கோவில் ரோடு, பார்க் ரோடு. மெயின்ரோடு வழியாக காந்தி மைதானத்தில் சென்று நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் நாராயணன், கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர்.