மதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொடியேற்று விழா
மதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொடியேற்று விழா
கோவில்பட்டி 2021 ஜனவரி 14 ;தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய மறுமலர்ச்சி திமுக சார்பில் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.மதிமுக மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் கலந்து கொண்டு லாரல் மில் காலனி சண்முகா நகர் தாமஸ் நகர் லிங்கம் பட்டி பெருமாள் பட்டி வடக்கு திட்டங்குளம் தெற்கு திட்டங்குளம் விஜயா புரி துறையூர் கரிசல் குளம் துரைச்சாமி புரம் பாண்டவர் மங்கலம் ஆவல் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றினார். இதில் மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் கணேசன் மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன் நகர துணை செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக நகரம் ஒன்றியம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.