Onetamil News Logo

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு தீருதவி தொகை ரூ.4,12,500/- காசோலையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார்.

Onetamil News
 

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு தீருதவி தொகை ரூ.4,12,500/- காசோலையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார்.


தூத்துக்குடி 2020 ஆக 14 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் பாரதிநகரை சேர்ந்த மரணமடைந்த கோடிஸ்வரன் என்பவரின் வாரிசுகளான தந்தை மாடசாமி, தாயார் திருமதி.செல்வம் ஆகியோரிடம்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு தீருதவி தொகை ரூ.4,12,500/- காசோலையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு தீருதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, மரணமடைந்த கோடிஸ்வரன் என்பவரின் வாரிசுகளான தந்தை மாடசாமி, தாயார் செல்வம் ஆகியோரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு தீருதவி தொகை முதல் கட்டமாக ரூ.4,12,500/- காசோலையை வழங்கினார். மேலும், ஜார்ஜ் சீட் பைல் செய்தபின்பு மீதமுள்ள ரூ.4,12,500/- வழங்கப்படும். ஏற்கனவே வசித்து வரும் வீட்டிற்கு வீட்டுமனைப்பட்டாவும், அதே இடத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாதம் ரூ.5,000 அகவிலைப்படியுடன் ரூ.13,500 ஆயுள் காலத்திற்கும் உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து ஆறுதல் கூறினார். 
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளா, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கோவில்பட்டி நகர பொறியாளர் கோவிந்தராசு, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி,அய்யாத்துரை, சாமிராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo