Onetamil News Logo

அரசு பஸ் வரமால் இருப்பதை கண்டித்து  பள்ளி மாணவர்கள்  சாலைமறியல்

Onetamil News
 

அரசு பஸ் வரமால் இருப்பதை கண்டித்து  பள்ளி மாணவர்கள்  சாலைமறியல்


                                         
  கோவில்பட்டி  ஜனவரி 11 ;  கோவில்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் அரசு பஸ் வரமால் இருப்பதை கண்டித்து சாலைமறியல் - காவல்துறையினர் உதவியுடன் பள்ளி சென்ற மாணவர்கள்
கோவில்பட்டி அருகேயுள்ள கெச்சிலாபுரத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ –மாணவிகள் கோவில்பட்டி மற்றும் குருமலை ஊத்துப்பட்டியில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 8 நாள்களாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவில்பட்டியில் இருந்து குருமலை செல்லும் அரசு பேருந்தும், மறு மார்க்கத்தில் கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து தாமதமாக வந்தாலும் மாணவர்கள் சிரமப்பட்டு சென்றனர். ஆனால் இன்று காலையில் இருந்து பேருந்து வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கோவில்பட்டி – குருமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் , ஆய்வாளர் ஜீடி தலைமையில் விரைந்து வந்து மாணவர்களை சமதானப்படுத்தி, தங்களது வாகனம் மற்றும் அந்த வழியாக வந்த மினி ஆட்டோக்;களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo