Onetamil News Logo

கோவில்பட்டி சரவணன் வீட்டில்  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்மனை போலீசார்  ஒட்டிச் சென்றனர் ;தூத்துக்குடி கலவர வழக்கு எதிரொலி 

Onetamil News
 

கோவில்பட்டி சரவணன் வீட்டில்  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்மனை போலீசார்  ஒட்டிச் சென்றனர் ;தூத்துக்குடி கலவர வழக்கு எதிரொலி 


கோவில்பட்டி  2018 ஜூன் 12 ;தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சரவணன் வீட்டில் சம்மன் ஒட்டிய காவல்துறை
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற சம்பவத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது தவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாக்கப்பட்டது மட்டுமின்றி, அங்கிருந்த வாகனங்கள் மற்றும் ஸ்டெர்லைட் குடியிறுப்புகளில் தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தனர்.     
                                  
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலவர வழக்கு தொடர்பாக மேலப்பாளையத்தினை சேர்ந்த கலீல்ரகுமான், முகமது இஷ்ரத், முகமது யூனுஷ், உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டையன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், தென்காசியை சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தீன் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.                               
                                    
அனைவரும் மக்கள் அதிகாரம் அமைப்பினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படதக்கது. இந்நிலையில் கோவில்பட்டி வக்கீல் தெருவில் உள்ள சரவணன் வீட்டிற்கு இன்று காலையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான சம்மனை அளிக்க வந்துள்ளனர். அவர்களுடன் கோவில்பட்டி கிராம நிர்வாக அதிகாரி போத்திராஜ்;ம் உடனிருந்துள்ளார். சரவணன் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து, அருகில் விசாரித்த போது, வீட்டில் யாரும் இல்லை, வெளியூர் சென்று இருப்பதாக கூறியுள்ளனர்.                                                                                                                                                       
இதனை தொடர்ந்து போலீசார் தாங்கள் கொண்டு வந்த சம்மனை சரவணன் வீட்டின் கதவில் ஒட்டிச்சென்றனர். சரணவன் கோவில்பட்டி அருகேயுள்ள பழைய அப்பனேரியை சேர்ந்த சுப்புலெட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்து , வக்கீல் தெருவில் தற்போதுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட சரவணன் மட்டும் வீட்டில் வசித்து வந்த நிலையில் தான் ஸ்டெர்லைட் ஆலை கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo