Onetamil News Logo

பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்

Onetamil News
 

பிரபல ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்



                                                                                                                                 
கோவில்பட்டி 2019 மே 16: கோவில்பட்டியில் ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம் அடைந்தது.
கோவில்பட்டி புது ரோடு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் அதே பகுதியில் ஷியாம் பேசன்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் அவரது 2 தளங்கள் கொண்ட கடையில் மேல் பகுதியில் திடீரென தீ பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் ஜவுளிக்கடையின் ஷட்டர் திறக்க முடியாத காரணத்தினால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். இதையெடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஷட்டர் உடைக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே இரண்டு தளங்களும் தீப்பற்றி எரிந்து அனைத்து துணிகள் எரிந்து நாசமானது. இந்த துணிகள் மதிப்பு சுமார் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்பு துறையினர் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு வண்டிகள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo