Onetamil News Logo

கட்டாலங்குளத்தில் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கோவில்பட்டி - செட்டிகுறிச்சி புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Onetamil News
 

கட்டாலங்குளத்தில் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கோவில்பட்டி - செட்டிகுறிச்சி புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம் 


தூத்துக்குடி 2018 ஜூலை 11 ; தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் கோவில்பட்டி - செட்டிகுறிச்சி புதிய தார்சாலை அமைக்கும் பணியினை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  தொடங்கி வைத்தார். 
தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் ஆர்ச் அருகில், கோவில்பட்டி முதல் செட்டிகுறிச்சி வரை, புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (11.7.2018) நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் செ.ராஜு அவர்கள் கலந்து கொண்டு, புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு  பேசியதாவது:
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2017 - 2018ம் ஆண்டு நிதியிலிருந்து ரூ.415 இலட்சம் செலவில், கோவில்பட்டி முதல் செட்டிகுறிச்சி வரை 11.35 கி.மீ தூரத்திற்கு, புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. குண்டும், குழியுமான சாலையில், மக்கள் சிரமமப்பட்டு சென்று வந்தனர். இதன் மூலம் மக்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதயில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் உள்ளதால் இச்சாலை விரைவில் இருவழிச்சாலையாக அகலப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்; சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் சின்னத்துரை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ராஜூ, முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo