Onetamil News Logo

பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள சில கடைகளில் காலாவதியான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ்க்கு ரகசிய தகவல் ;அதிரடி நடவடிக்கை ;4 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்து அழிப்பு   

Onetamil News
 

பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள சில கடைகளில் காலாவதியான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ்க்கு ரகசிய தகவல் ;அதிரடி நடவடிக்கை ;4 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்து அழிப்பு   


கோவில்பட்டி 2018 டிசம்பர் 8 ;கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள சில கடைகளில் காலாவதியான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகேசன்(கோவில்பட்டி நகராட்சி), ராஜா(கோவில்பட்டி ஒன்றியம்;), நாகசுப்பிரமணியன்(கயத்தார் ஒன்றியம்), சந்திரசேகர்(தூத்துக்குடி ஒன்றியம்), ராஜாமுத்து(ஸ்ரீவைகுண்டம்) அண்ணாபஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் கலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று சில கடைகளில் வைக்கப்பட்டு இருந்த உணவு பொருள்கள், இனிப்பு வகைகளில் அதிகளவில் ரசயான சாய பொடிகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் சுமார் 4 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது போன்ற உணவு பொருள்களை வைத்து இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo