Onetamil News Logo

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்; 399 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,56,000/- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வழங்கினார்.  

Onetamil News
 

கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 399 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ரூ.13,56,000/- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வழங்கினார்.  


தூத்துக்குடி 2018 ஜனவரி 9 ; தூத்துக்குடி மாவட்டம்  கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்; 399 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,56,000/- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ வழங்கினார்.  
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும்  வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ  தலைமையில் இன்று (09.01.2019) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2 பள்ளிகளில் சேர்த்து மொத்தம் 399 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,56,000/- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.  
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில்; செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ  பேசியதாவது:-  
புரட்சித்தலைவி அம்மா  இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார்கள். பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணிணி, சீருடை, பாட புத்தகங்கள், பாட குறிப்பேடுகள் உள்ளிட்ட 14 வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தினார்கள்.  அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் 2017-2018, 2018-2019ம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவது  துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 188 மாணவர்கள், 96 மாணவிகள் என மொத்தம் 284 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9,65,000/- மதிப்பிலும், வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவர்கள், 70 மாணவிகள் என மொத்தம் 115 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3,91,000/-   மதிப்பிலும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படுகிறது. 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கென புதிய சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.  பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் எளிய முறையில் பாடங்களை படித்து கற்றுக்கொள்வதற்காக யூ டியுப்பில் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன்மூலம் மாணவ, மாணவியர்கள் புத்தகம் இல்லாமல் எந்த இடத்திற்கு சென்றாலும் படிக்கும் வகையில் இத்திட்டம் அமையும்.
அம்மா அவர்களின் பள்ளி கல்வித்துறைக்கு செய்த சாதனையை உலக நாடுகள் பாராட்டும் வகையில்; சென்னைக்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன்  அம்மா அவர்களை நேரில் வந்து பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்கள் நீட் தேர்விற்கு பயிற்சி பெறுவதற்கு என 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருங்காலங்களில் நீட் மட்டுமல்லாமல் எத்தகைய தேர்வினையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெற அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இன்றைய காலகட்டத்தில் மதிப்பெண் இல்லாமல் கிரேடு சிஸ்டத்தினை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி வருகிறது. மாணவர்கள் மதிப்பெண்களை மொபைலில் எஸ்.எம்.எஸ். மூலம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் தமிழக அரசு பல எண்ணற்ற திட்டங்களை தமிழக மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தி வருகிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல அளவில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான எரிபந்து போட்டியில் திருநெல்வேலி மண்டல அளவில 3வது இடம் பெற்ற வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதற்கான கோப்பையை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  காண்பித்து வாழ்த்து பெற்றனர். 
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர்  ஜே.விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன், கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீதாமகேஷ்வரி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லத்துரை, முக்கிய பிரமுகர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அலங்காரபாண்டியன், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo