Onetamil News Logo

பெண் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை

Onetamil News
 

பெண் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை



கோவில்பட்டி  2020 மே 23;கோவில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி முத்துராமலிங்கத் தேவர் நகரைச் சேர்ந்தவர் மகாராஜா மனைவி செல்வி(23). கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo