Onetamil News Logo

நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் 1603 மாணவ, மாணவிகளுக்கு ரூ.73.73 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டி

Onetamil News
 

நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் 1603 மாணவ, மாணவிகளுக்கு ரூ.73.73 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டி


நாலாட்டின்புதூர்  2020 ஜன.25:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் 1603 மாணவ, மாணவிகளுக்கு ரூ.73.73 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று (25.01.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு 10 பள்ளிகளை சேர்ந்த 1603 மாணவ, மாணவிகளுக்கு ரூ.73.73 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 
பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் 27 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது அதிகமான அளவில் தேர்ச்சிகளை பெற்று சிறப்பாக திகழ்ந்து வருகிறது. புரட்சித்தலைவி அம்மா  2001ம் ஆண்டில் பள்ளி குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதை பார்த்து தாயுள்ளத்துடன் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். காலத்திற்கேற்ப மாணவ, மாணவிகள் உலக அறிவை வளர்த்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி, சீருடை, சைக்கிள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் 137 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 14459 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.4600/- மதிப்பிலான மிதிவண்டிகள் மொத்தம் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.  கோவில்பட்டி வட்டம் நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் நாலாட்டின்புதூர், கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, வில்லிசேரி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், கோவில்பட்டி ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளி, எவரெஸ்ட் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 1603 மாணவ, மாணவிகளுக்கு ரூ.73.73 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. எங்களது காலத்தில் புத்தகம் வாங்குவதற்கு பெற்றோர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்தது. சைக்கிள் வாங்குவதும் சாத்தியம் இல்லாத நிலை இருந்தது. இன்று கல்விக்காக பல திட்டங்களை அரசு செய்து வருகிறது. நீங்கள் சிறந்த குறிக்கோள்களை வளர்த்துக்கொண்டு அரசின் திட்டங்களை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை அடைய வேண்டும் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார். 
தொடர்ந்து பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்ற கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ருத்ரமாயனை   செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டி உலக அளவில் சாதனை புரிய வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார். மேலும், மாநில அளவில் கரூரில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்ற கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  வாழ்த்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் இரா.சத்யா, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், கணேஷ்பாண்டி நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனி மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo