Onetamil News Logo

ரூ.100/- மதிப்பிலான 12 வகையான காய்கறிகள் உள்ளடங்கிய காய்கறி பைகளை அமைச்சர் பொது மக்களுக்கு அமைச்சர் வழங்கி தொடங்கிவைத்தார். 

Onetamil News
 

நடமாடும் காய்கறி அங்காடி ; ரூ.100/- மதிப்பிலான 12 வகையான காய்கறிகள் உள்ளடங்கிய காய்கறி பைகளை அமைச்சர் பொது மக்களுக்கு அமைச்சர் வழங்கி தொடங்கிவைத்தார். 


கோவில்பட்டி,2020 ஏப்.4:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் வளாகத்தில் நடமாடும் காய்கறி அங்காடியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  கொடியசைத்து துவக்கி வைத்து, ரூ.100/- மதிப்பிலான 12 வகையான காய்கறிகள் உள்ளடங்கிய காய்கறி பைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடமாடும் காய்கறி அங்காடி துவக்க விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (04.04.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, 4 நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, ரூ.100/- மதிப்பிலான தக்காளி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட12 வகையான காய்கறிகள் உள்ளடங்கிய காய்கறி பைகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் சத்யா , ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 
பின்னர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள  4 நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் மூலம், பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் வழங்க உத்தரவிட்டார். மேலும், தேவைக்கேற்ப  காய்கறிகளை பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில், நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தை கூடுதலாக இயக்க நகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். 
அதனை தொடர்ந்து, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மின்னனு வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொரோனா  விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டு, அனைத்து பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை தொடர்ந்து திரையிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார். 

மேலும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , அம்மா உணவகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின்   தரத்தினை சுவைத்து ஆய்வு செய்தார். மேலும், அம்மா உணவகத்திற்கு உணவு வேண்டி மிகவும் வறுமை நிலையில் உள்ள நபர்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கூடுதலாக உணவு தேவைப்படும் பட்சத்தில் உடனே தயார் செய்து வழங்கிட உத்தரவிட்டு, அவர்களின் சொந்த பணத்திலிருந்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் 12 பணியாளர்களுக்கு தலா ரூ.1000/-  வீதம், ரூ.12,000/-த்தை ரொக்கமாக வழங்கினார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும், சிறப்பான பணியாற்றிட வேண்டும் என ஊக்கப்படுத்தினார். 
 பின்னர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 
உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்துகின்ற கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கின்ற நேரத்தில்  மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் பல்வேறு சலுகைகைளயும், திட்டங்களையும் அறிவித்து, மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக சிறப்பான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து வருகிறார்கள். இவையெல்லாம் பெற்றுக் கொண்டு மக்கள் நமது நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையாக, நம் வீட்டிற்கு செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், மக்கள் அரசு அறிவித்துள்ள சுய ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கின்ற நேரத்தில் அவர்கள் மட்டுமில்லாமல், அவர்களது குடும்பமும், நமது நாடும் பாதுகாக்கப்படும். சுய ஊரடங்கு காலங்களில் மக்கள் அத்தியாவசிய  பொருட்களுக்காக வெளியே வரக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் மூலம், பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி பகுதியில் இன்று 4 வாகனம் மூலம் காய்கறிகளின் தொகுப்பு ரூ.100 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  மேலும், தேவைப்படும் அனைத்து பகுதியிலும் இதுபோன்ற திட்டம் தொடங்கி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கொரோனா வைரஸ் நிவாரணத் தொகை ரூ.1000/- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அர்ப்பணிப்பு பணியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவ  பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அரசு வழங்கும் என அறிவித்திருந்தது. அதைப்போல் செய்தியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

மாநிலத்திலிருந்து நமது மாவட்டத்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினை பாதுகாப்பதோடு அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு தங்குமிடம் உணவு ஏற்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளது. பொது மக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனப்தற்காகவும், பொது மக்கள் அதிகமாக கூடாத வகையில் காய்கறி சந்தைகளை பல்வேறு இடங்களில் பிரித்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பேரூந்து நிலையங்கள் மற்றும் பயன்பாடில்லாத மைதானங்கள், தற்காலிக காய்கறி சந்தைகளாக மாற்றியமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். 
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் இராஜாராம், கோவில்பட்டி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அனிதா, நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், நடுவர்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டு சங்கத் தலைவர் ஆழ்வார் உதயகுமார், கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், வட்டாட்சியர் மணிகண்டன், சுகாதார அலுவலர் இளங்கோ, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாதுரைபாண்டியன், விஜயபாண்டியன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo