டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்
கோவில்பட்டி 2022 ஜூலை 31 ; டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் அரசு மருத்துவர் வெங்கடேஷ் தலைமையில் புத்துயிர் ரத்ததான கழக நிறுவன தலைவர் தமிழரசன்,முன்னணியில் மாபெரும் ரத்ததான முகாம் நகர மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் குழுவினர் அரசு மருத்துவர் தேவசேனா, சேவியர் செவிலியர்கள் கண்ணகி, கனக லட்சுமி, சுதா, மற்றும் ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜேந்திரன்,ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மகேஷ், பாலசுப்பிரமணியன், ராமர், உள்ளிட்ட அக்னிச் சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.