Onetamil News Logo

படித்தவர்களுக்கு வேலை இல்லை 45 ஆண்டுகளுக்குப் பின்பு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு  ;டி.கே.ரெங்கராஜன் எம்.பி.கோவில்பட்டியில் பேச்சு 

Onetamil News
 

படித்தவர்களுக்கு வேலை இல்லை 45 ஆண்டுகளுக்குப் பின்பு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு  ;டி.கே.ரெங்கராஜன் எம்.பி.கோவில்பட்டியில் பேச்சு 


கோவில்பட்டி 2019 நவம்பர் 7 ;படித்தவர்களுக்கு வேலை இல்லை 45 ஆண்டுகளுக்குப் பின்பு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு  ;டி.கே.ரெங்கராஜன் எம்.பி.கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறினார். 
கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி அரசு மேல் நிலைப் பள்ளியில் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி கே ரெங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் டி கே ரெங்கராஜன் எம்பி கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்தியஅரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளது இதுபோன்ற காரணங்களால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது என்றும், படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பது 45 ஆண்டுகளுக்குப் பின்பு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், திருக்குறள்,உ.வு.சி. பாரதியார் இவர்களை எல்லாம் அந்த காலகட்டத்தினை வைத்து பார்க்கமால் வேறு விதமாக பார்ப்பது சட்டவிரோதமான கிரிமினல் நடவடிக்கை என்றும், நீட் தேர்வு எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தங்கள் கட்சி சார்பில் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பு கிடைத்தது. உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை மறுத்துவிட்டது. ஆகவே நீட் தேர்வு இன்று சட்டப்பூர்வமாக ஆகிவிட்டது. அதில் எப்படி செயல்படுத்துவது என்பதை நாம் முடிவு எடுக்க வேண்டும் என்றும்,டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி குறைய வில்லை என்றால் அரசு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்,தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடாத காரணத்தினால் நம்மால் மூச்சுவிட முடிகிறது. கையெழுத்து இட்டு இருந்தால் சிறு தொழில்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கும் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo