Onetamil News Logo

கேரளா நிலச்சரிவு உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு 25 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.     

Onetamil News
 

கேரளா நிலச்சரிவு உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு 25 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.     


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 11 ;கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 49பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்த 22 பேர் , ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 5 பேர் என தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  முன்னாள் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்.கட்சியினர் கயத்தார் பாரதி நகரில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தோர் புகை படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் முன்னாள் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில் உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கு தமிழக அரசு 25 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.இதில்  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி பாண்டியன், பிரேம்குமார், மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் அய்யலுசாமி, ஒன்றியதலைவர் செல்லத்துரை, நகர தலைவர் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo