Onetamil News Logo

இரு வெவ்வேறு இடங்களில் இளைஞர், தொழிலாளியை தாக்கி பணம், செல்லிடப்பேசி, நகை பறிப்பு

Onetamil News
 

இரு வெவ்வேறு இடங்களில் இளைஞர், தொழிலாளியை தாக்கி பணம், செல்லிடப்பேசி, நகை பறிப்பு


 

கோவில்பட்டி 2018 செப் 14 ;  கோவில்பட்டியில் இரு வெவ்வேறு இடங்களில் இளைஞர், தொழிலாளியை தாக்கி பணம், செல்லிடப்பேசி, நகை பறிப்பு

கோவில்பட்டியில் இரு வெவ்வேறு இடங்களில் இளைஞர் மற்றும் தொழிலாளியை ஆயுதங்களால் தாக்கி பணம், செல்லிடப்பேசி மற்றும் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஏழாயிரம்பண்ணை விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கண்ணன் மகன் செல்வகுமார்(21). பட்டதாரியான இவர், செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் காமநாயக்கன்பட்டிக்கு கேட்டரிங் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
மோட்டார் சைக்கிள், பசுவந்தனை சாலையில் உள்ள பெட்ரோல் பல்க் அருகே சென்று கொண்டிருந்த போது, இவரைப் பின்தொடர்ந்து வந்த பைக்கில் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி செல்வகுமாரிடமிருந்த ரூ.500, ஏ.டி.எம். கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் சுமார் ரூ.10ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசியை பறித்துவிட்டுச் சென்றுவிட்டார்களாம்.
பின்னர், காயமடைந்த செல்வகுமார் அருகேயுள்ள பெட்ரோல் பல்க்கில் உதவி கேட்டு சென்ற போது பெட்ரோல் பல்க் ஊழியர்களும் உதவி செய்ய மறுத்துவிட்டார்களாம்.
அதைத் தொடர்ந்து, செல்வகுமார் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் எட்டயபுரம் சாலையில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள், மேற்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களும் அவருக்கு எவ்வித உதவியும் செய்யாமல் அவரை விரட்டிஅனுப்பிவிட்டனர்.
இதனால் மனமுடைந்த செல்வகுமார் புதன்கிழமை மாலை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜை நேரில் சந்தித்து, செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையே, நிகழ்ந்த சம்பவத்தை கேட்டறியாமல் தன்னையே மிரட்டியது ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காவல் துறை உங்கள் நண்பர்கள் எனக் கூறுவதை எவ்வாறு ஏற்பது என்றும், இதுபோன்ற அசம்பாவிதம் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜிடம் கேட்ட போது, இச்சம்பவம் குறித்து காவல் நிலையங்களில் கேட்டு துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் நிலையங்களில் யார் புகார் அளிக்க எந்நேரம் வந்தாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் எந்நேரமானாலும் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் உடனடியாக 94981-01835 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மற்றொரு சம்பவம்:
கோவில்பட்டி ஜோதி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் புதன்கிழமை பேன்ஸி ஸ்டோர் திறப்பு விழா நிகழ்ச்சி வைத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இவரது உறவினர் மதுரை வியாகப்ப நகரைச் சேர்ந்த தங்கராஜ்(58) செவ்வாய்க்கிழமை இரவு கணேசன் வீட்டிற்கு வந்திருந்தாராம்.
இவர் வீட்டிற்குள் இருந்த போது வந்த செல்லிடப்பேசியில் பேசுவதற்காக, வீட்டருகே உள்ள காளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் தங்கராஜிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், ரொக்கப்பணம் ரூ.3,500 மற்றும் செல்லிடப்பேசியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்களாம்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo