Onetamil News Logo

இருதரப்பினரிடையே தகராறு 6 பேர் கைது - கயத்தாா் காவல் நிலையம் முற்றுக்கை

Onetamil News
 

இருதரப்பினரிடையே தகராறு 6 பேர் கைது - கயத்தாா் காவல் நிலையம் முற்றுக்கை


கோவில்பட்டி 2018 செப் 14 ;      
    கயத்தாறு அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தொடர்புடையதாகக் கூறப்படும் 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    கயத்தாறையடுத்த வடக்கு கோணார்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முத்துகுமார்(22). இவர் தனது சகோதரர் விஜயபாண்டியுடன் பைக்கில் அதே பகுதியில் உள்ள காலனிப் பகுதியில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம்.
    அப்போது காலனித் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் வசந்த்(19), சின்னமாடசாமி மகன் சரத்குமார்(21), மாரியப்பன் மகன் மனோகர், வீரையா மகன் குமார்(30) ஆகியோர் வண்டியை மறித்து, ஏன் வேகமாக ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள் எனக் கூறி தகராறு செய்தார்களாம்.
    தகராறு முற்றிய நிலையில், வசந்த் உள்பட 4 பேரும் முத்துகுமார் மற்றும் அவரது சகோதரர் விஜயபாண்டி ஆகியோரையும், பைக்கையும் தாக்கினார்களாம்.
    இதையடுத்து, முத்துகுமார், அவரது சகோதரர் விஜி உள்பட செட்டிக்குறிச்சி காலனித் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் அய்யாத்துரை(18), வடக்கு கோணார்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் மகாராஜன் ஆகிய 4 பேரும் மீண்டும் அங்கு சென்று இழிவாகப் பேசி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து முத்துகுமார் அளித்த புகாரின் பேரில், வசந்த், சரத்குமார், குமார் ஆகிய 3 பேரையும், சரத்குமார் அளித்த புகாரின் பேரில் முத்துகுமார், விஜயபாண்டி, அய்யாத்துரை ஆகிய 3 பேரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மகாராஜன் மற்றும் மனோகர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
    கயத்தாறு காவல் நிலையம் முற்றுகை:
    இந்நிலையில், வடக்கு கோணார்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் என்றும், இருதரப்பைச் சேர்ந்த தலா 10 பேரை அழைத்து வந்து கைது செய்வதை கைவிட வலியுறுத்தி மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமையில், புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணியன், நகரச் செயலர் சாக்குப்பாண்டியன், முன்னாள் நகரச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலர்கள் ரவிகுமார், அருள்ராஜ், கோவில்பட்டி ஒன்றியச் செயலர் அதிகுமார், வடக்கு கோணார்கோட்டை ஊர் தலைவர் வேல்பாண்டி, செட்டிக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராமையாபாண்டியன், கிருஷ்ணசாமி உள்பட பலர் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    பின்னர் போராட்டக் குழுவினருடன் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் தகராறில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு வற்புறுத்தினர்.
    அப்போது, தகராறில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதாகவும், எஞ்சியவர்களை எவ்வித வழக்குமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் போராட்டக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
    அதையடுத்து, தகராறில் ஈடுபட்டவர்களை போராட்டக் குழுவினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதையடுத்து, போலீஸார் விசாரணைக்காக அழைத்து வந்த அனைவரையும் விடுவித்ததையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo