Onetamil News Logo

தூத்துக்குடி அருகே வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி         

Onetamil News
 

தூத்துக்குடி அருகே வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி         


கோவில்பட்டி  2020 ஜூலை 7 ;கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில்  இரண்டு வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கி மூடப்பட்டது மட்டுமின்றி வங்கியில் நகராட்சி தூய்மைப் பணி ஊழியர்கள் கிருமி நாசினி தடுப்புமருந்து தெளித்தனர். இதேபோன்று எட்டயபுரத்தில் செயல்பட்டுவரும் கனரா வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கும் வங்கி மூடப்பட்டுள்ளது. கோவில்பட்டி பஸ் நிலையம் எதிரே உள்ள பிரபல நகைக் கடையான அன்னை ஜூவல்லர்ஸ் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகை கடை மூடப்பட்டு உள்ளது. மேலும் கோவில்பட்டி நகரில் ஏழு பேருக்கும், கயத்தார் பகுதியில் இரண்டு பேருக்கும், கழுகுமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில்  மொத்தம் 16 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo