Onetamil News Logo

தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை - தமிழக அரசினை பற்றி தமிழிசை சான்றிதழ் கொடுக்க தேவையில்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ சூடான பேட்டி 

Onetamil News
 

தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை - தமிழக அரசினை பற்றி தமிழிசை சான்றிதழ் கொடுக்க தேவையில்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ சூடான பேட்டி 


கோவில்பட்டி  2019 ஜனவரி 12 ;கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா  மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து மக்களும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தந்தார். அவரது வழியில் செயல்படும் இந்த அரசும், அதே வகையில் மாணவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விடுதி மற்றும் மைதானம் வேண்டும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி ஜெபராஜ், தாசில்தார் பரமசிவம், கல்லூரி முதல்வர் தீபா, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத் துரை பாண்டியன், வினோபாஜி, ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், இனாம் மணியாச்சி ஊராட்சி செயலாளர் ரமேஷ், துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்க தலைவர் கணேச பாண்டியன், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார், அதிமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், ஜெமினி என்ற அருணாசலசாமி,அல்லித்துரை, பழனிக்குமார், பாலமுருகன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து  மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
இதன் பின்பு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் தாமரை மலரபோவதில்லை,தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி இருக்கா, இல்லையா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும், தமிழிசை சௌந்தர்ராஜன் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை, தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக திராவிட பாரம்பரிய ஆட்சி நடைபெறுகிறது. இதில் 26 ஆண்டுகள் எம்.ஜீ.ஆர்,ஜெயலலிதா இருவரும் வெற்றிகரமாக ஆட்சி நடத்தினர். இவர்கள் மறைவுக்கு பின்பும் அதிமுக ஆட்சி 2 ஆண்டுகலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஆரோக்கியமான ஆட்சி தருவதால் திரும்ப திரும்ப அதிமுகவிற்கு வாய்ப்பு அளித்துள்ளனர். ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசீட் அல்லது நோட்டாவிட அதிக வாக்குகள் வாங்கினால் நல்லது,மீண்டும்,மீண்டும் அதிமுக ஆட்சியை மக்கள் அமைத்து தந்து இருக்கிறார்கள் என்பதனை தமிழிசை சௌந்தராஜன் தெரிந்து கொண்டால் நல்லது என்றும், பிரதமர் மோடி ரஜினி ,கமல் இருவருக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ள கேள்விக்கு அமைச்சர் பதில் கூறுகையில் அழைப்பு விடுத்தவர்களை தான் கேட்க வேண்டும், தமிழகத்தில் அதிக வாக்கு வாங்கி கொண்டு இருக்கும் இயக்கம் அதிமுக தான். சமீபத்தில் வந்த கருத்துகணிப்பில் அதிமுகவிற்கு 33சதவீத வாக்கு வாங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அது தான் நடைமுறையும் கூட என்றும், கடம்பூர், வில்லிசேரி, சத்திரப்பட்டி, கயத்தார், எட்டயபுரம் - பருவக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் ஒதுக்குபுறமாக இருந்ததால் சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டது. லெட்சுமி மில் முதல் ரெயில்வே மேம்பால வரையிலான பகுதி நகரத்தின் மைய பகுதி காலம் காலமாக வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது, அதன் பின்பு மரங்கள் மின்கம்பங்கள் அகற்ற உரிய அனுமதி காலதாமதம் ஏற்பட்டது, பொங்கலுக்கு முன்பாக லெட்சுமி மில் முதல் ரெயில்; தொடங்கப்படும் என்றும், வைகோ கட்சி நடத்த முடியமால் திண்டாடி, திணறி வருகிறார். கோபாலபுரம் பக்கம் என் சாம்பல் கூட போகாது என்று சொன்னார். இன்று ஸ்டாலினை முதல்வராக்க போவதாக கூறியுள்ளார். இவர் சொன்னாலே ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று நாட்டு மக்களுக்கு தெரியும், அவ்வளவு ராசிக்கு சொந்தக்காரர், அதிமுக ஆட்சி 2021 வரை நீடிக்கும், மீண்டும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo