Onetamil News Logo

30 திருநங்கைகள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,நேரில் சென்று ஆய்வு  

Onetamil News
 

30 திருநங்கைகள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,நேரில் சென்று ஆய்வு  


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 1: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சந்தீப்நகர் பகுதியில் 30 திருநங்கைகள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சந்தீப்நகர் பகுதியில் 30 திருநங்கைகள் மற்றும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 30 மாட்டு தொழுவம், மற்றம் சாலை, குடிநீர் வசதி என மொத்தம் ரூ.1.65 கோடி மதிப்பில் நடைபெறும் இறுதி கட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  இன்று (01.08.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு பகுதியில் திருநங்கைகளுக்கு வீட்டு வசதி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பால் பண்ணை அமைக்கும் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள 30 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள், ரூ.34.50 லட்சம் மதிப்பில் மாட்டுதொழுவம், ரூ.22 லட்சம் மதிப்பில் தார்சாலை, ரூ.10 லட்சம் மதிப்பில் வடிகால் வசதி மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் குடிநீர் வசதி ஆகியவற்றுக்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.  
ஒவ்வொரு திருநங்கைக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாடுகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 30 பேரும் சேர்ந்து ஒரு கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு ஆவின் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு தினமும் இங்கு உற்பத்தி செய்யப்படும் சுமார் 800 லிட்டர் பால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதன் மூலம் இவர்களுக்கு வாரம் ஒருமுறை வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வருவாயினை அதிகரிக்கும் வகையில் மெயின் பஜாரில் கடைகள் அமைக்கப்பட்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு; விற்பனை செய்வதற்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு பசுமை வீடுகளுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில்  அமைச்சர் அவர்களின் தலைமையில் வீடுகள் மற்றும் பால்பண்ணை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, உதவி செயற்பொறியாளர் ரெஜினால்டு, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஒன்றிய உதவி பொறியாளர் தமிழ்செல்வன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முனியசாமி, மந்தித்தோப்பு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo