Onetamil News Logo

கடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி

Onetamil News
 

கடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி


தூத்துக்குடி 2020 மார்ச் 26 ;தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடியை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  திறந்து வைத்தார். 
தூத்துக்குடி மாவட்டம் ; கடம்பூர் ரயில் நிலையம் சாலை  அருகில், கயத்தார் தமிழ்நாடு கிராம வங்கி அருகில் உள்ள ஜெராக்ஸ், கழுகுமலை ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டக சாலை தெற்கு ரத வீதி ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (26.03.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு அங்காடியை திறந்து வைத்தார். 
பின்னர்;  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
உலகில் உள்ள 195 நாடுகளில் 186 நாடுகளில் கொரானோ வைரஸ் பரவியுள்ளது. உலக நாடுகள் கொரனோ வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நமது இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரனோ வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார்கள். மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.  முதலில் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும், நண்பர்கள் மற்றும் நாட்டில் உள்ள பொதுமக்கள் விழிப்புணர்வுடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர்  தெரிவித்துள்ளார்கள்.  
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானோ காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை.  தூத்துக்குடி மாவட்டத்தில் 41 வருவாய் கோட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் வீடுகளின் நபர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.  பொதுமக்களுக்கு மகளிர் திட்டம் மூலம் தேவையான முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளளது. நேற்றைய தினம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், கோவில்பட்டி நகராட்சி பகுதியிலும் விற்பனை அங்காடி திறந்து வைக்கப்பட்டது. இன்று 3 பேருராட்சி பகுதியில் திறக்கப்பட்டது.  முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளபடி விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அரசு எடுக்கும் கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, மகளிர் திட்ட உதவி அலுவலர் சாமதுறை, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சசிகுமார், செயல் அலுவலர்கள் மாதவன் (கடம்பூர்;), ஜோதிபாசு (கயத்தார்), முருகன்(கழுகுமலை) முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.எஸ்.பி.நாகராஜா, கழுகுமலை ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo