Onetamil News Logo

போலியோ சுடர் பயணத்திற்கு கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்து வரவேற்பு

Onetamil News
 

போலியோ சுடர் பயணத்திற்கு கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்து வரவேற்பு


கோவில்பட்டி 2020 பிப்ரவரி 27 ;கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் போலியோ சுடர் பயணத்திற்கு கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்துவரவேற்பு அளிக்கப்பட்டது.இந்திய ரோட்டரி சங் கத்தின் 100வது ஆண்டை முன்னிட்டு போலியோ ஒழிப்பு சுடர் கன்னியாகுமரியில் 23.2.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டு 100 நாட்களில் காஷ்மீர் செல்ல உள்ளதுரோட்டரி மாவட்டங்கள் வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி , கல்லூரி மாணவர்கள் ரோட்டரி சங்கங்களின் வரவேற்பையும் பிரார்த்தனைகளையும் . ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு நிதியையும் பெற்றுக் கொண்டு காஷ்மீர் செல்கிறதுகோவில்பட்டியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்ரோட்டரி மாவட்ட முன்னாள் துனை ஆளுநர் சீனிவாசன் ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் முத்து செல்வன், செயலாளர் முத்து முருகன்ஆகியோர் முன்னிலை வகித்தனர், பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.போலியோ சுடருக்கு ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பாபு, மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் ஆகியோர் வரவேற்று துவக்கி வைத்தனர் .இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி , வீராச்சாமி, தாமோதரக் கண்ணன்,பள்ளி இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்க இணை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo