Onetamil News Logo

புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில்; 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார். 

Onetamil News
 

புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில்; 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார்.     


கோவில்பட்டி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலட்டின்;புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில்; 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் நாலட்டின்;புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களையும் வழங்கினார். 
பின்னர்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா  தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மற்றிக்காட்டுவேன் என்று சபதம் செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஒரு மாநிலம் கல்வியில் சிறந்து விளங்கினால் அதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளம் பெருகி முதன்மையாக திகழும் என்பதை கருத்தில்கொண்டு கல்வி துறைக்கு அதிக திட்டத்தை தந்து முதன்மை மாநிலமாக மாற்றினார்கள். தமிழக மாணவ, மாணவியர்களுக்கு கல்வி தரத்தை உயர்த்திடும் வகையிலும் பெற்றோர்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும் காலணி, புத்தகம், பேருந்து பயண அட்டை, மடிக்கணிணி உள்ளிட்ட 14 வகையான திட்டங்களை செயல்படுத்தினார்கள். அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் இல்லாவிட்டாலும், தொலைதூர பகுதியில் இருந்து பள்ளிக்கு சரியான  நேரத்தில் வரும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில்தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய மடிக்கணிணி திட்டத்தினை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளாண்டன் அவர்களே தலைமை செயலகத்திற்கு வந்திருந்து அம்மா அவர்களை பாராட்டினார்கள். 
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.  அம்மாவின் அரசு பள்ளி கல்வி துறையில் இந்தியாவிற்கே ரோல் மாடலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாணவர்களின் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வகையில் மதிப்பெண் கிரேடு முறை நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்தல், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திட்டம், மேலும் பாடத்திட்டங்களை சிபிஎஸ்;இ தரத்திற்கு இணையாக உயர்த்திடும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கு என தனியாக தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர்  சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்கள். இந்தியாவிலேயே கல்விக்கென தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை துவக்கும் மாநிலம் தமிழகம்தான். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையம் இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் இங்கேயே தேர்வு எழுதும் வகையில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
மேலும் இப்பள்ளிக்கு தேவையான கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்விழாவில் கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில சேர்ந்த 21 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.  மேலும், இப்பள்ளியை சேர்ந்த 112 மாணவர்கள் மற்றும் 113 மாணவிகள் என 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது.  மேலும், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களும் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி பயின்று உயர் பதவிகள் மற்றும் சிறப்பான தொழில்களை தொடங்கி தமிழகத்திற்கு பெருமை பெற்று தர வேண்டும் என பேசினார். 
விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், சிவகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகங்கா, நிலவள வங்கி தலைவர் இ.பி.ரமேஸ், கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவடிவு, முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், கணேசபாண்டியன், ராமச்சந்திரன், கிருஷ்ணசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo