Onetamil News Logo

வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.51 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை அமைச்சர் வழங்கினார்.

Onetamil News
 

வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.51 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை அமைச்சர் வழங்கினார்.


 தூத்துக்குடி  2019 ஜூலை 8 ; தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.51 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா இன்று (11.07.2019) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு 159 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.51 லட்சம் மதிப்பிலான மடிக்கணிணிகளை வழங்கினார். 
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:  புரட்சித்தலைவி அம்மா  இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து செயல்படு;த்தினார்கள். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் இன்றைய காலத்திற்கேற்ப கல்வி கற்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தோடு மடிக்கணிணி வழங்கும் திட்டத்தினை அறிவித்து தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்தாலும் அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் இன்றும் மக்கள் இல்லத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் இன்றும் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். 2011ம் ஆண்டு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றால் மடிக்கணிணி வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். பின்னர் வெற்றி பெற்றவுடன் இத்திட்டத்தினை அவர்களே துவக்கி வைத்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் கடந்த 8 ஆண்டு காலமாக் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடை, புத்தகப்பை, உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 23312 பேருக்கு மடிக்கணிணிகள் ரூ.28.61 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 159 மாணவ, மாணவிகளுக்கு ரூ.19.51 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து திட்டங்களையும் நீங்கள் முழுமையாக பெற்று வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார். அதனைத்தொடர்ந்து, 7 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிக்கணிணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வழங்கினார்.
இவ்விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் பரமசிவன், முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்வரன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் முத்துமாரி,  முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்டியன், ரமேஷ், ராமச்சந்திரன், கணேஷ், வடமலைபாண்டியன் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo