Onetamil News Logo

74-வயதுக்கும் 40-வயதுக்கும் கள்ளக்காதல்;வர மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய முதியவர் கைது

Onetamil News
 

74-வயதுக்கும் 40-வயதுக்கும் கள்ளக்காதல்;வர மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய முதியவர் கைது


தூத்துக்குடி  2019 ஜூலை 19 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி  நகரை சேர்ந்த 40வயது பெண்ணை உல்லாசத்துக்கு வர அழைத்தார். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டு வரவில்லை, இதனால் அந்தப் பெண்ணை கத்தியால்  குத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பகுளம் பகுதியைச்  சேர்ந்த பெருமாள் இவரது மகன் ரத்தினம் (74). இவர் அந்தப் பகுதியில் சலூன்கடை நடத்தி வந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள  ஜோதி நகரில் வசிக்கும் சீனிவாசன் இவரது மனைவி அருணாதேவி (40) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு பல ஆண்டுகளாக இருத்துள்ளது.இந்த நிலையில் அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது உல்லாசத்துக்கு வருமாறு  அழைத்தார். ஆனால் அந்த பெண் வருவதாகக் கூறி வரவில்லை,  அந்தப் பெண்ணை முதியவர் அழைத்துள்ளார்.வர மறுத்த அந்த இளம் பெண்ணை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
மருத்துவ சிகிக்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அருணாதேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு  காவல் நிலைய காவல் ஆய்வாளர்  அவுடையப்பன் வழக்குப் பதிவு செய்து   விசாரணை செய்துவருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo