Onetamil News Logo

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ;பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம் 

Onetamil News
 

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ;பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம் 


கோவில்பட்டி 2019 அக்டோபர் 8 ;தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன.
கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செல்வமோகன். இவர் மற்றும் இவரது மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி எட்டயபுரம் சாலை திட்டங்குளத்தையடுத்த கழுகாசலபுரம் பகுதியில் முழு இயந்திர தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார்.
இவரது ஆலையில் ஞாயிற்றுக்கிழமை தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்த அறை மற்றும் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்தவுடன் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் தனது 2 வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பொருள்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் பார்வையிட்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo