தூய்மை கோவில்பட்டி பொதுமக்களுடன் இணைந்து நகரை தூய்மையாக்குதல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா : அமைச்சர் கடம்பூர் ராஜூ,கலெக்டர் செந்தில்ராஜ்,டிஎஸ்பி கலைகதிரவன் ஆகியோர் பங்கேற்பு
கோவில்பட்டி 2021 ஜனவரி 13 ; தூய்மை கோவில்பட்டி பொதுமக்களுடன் இணைந்து நகரை தூய்மையாக்குதல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா : அமைச்சர் கடம்பூர் ராஜூ,கலெக்டர் செந்தில்ராஜ்,டிஎஸ்பி கலைகதிரவன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
கோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழாவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்து அனைவருக்கும் பொங்கல் இனிப்புகளை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் இனிப்புகளை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு
நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ்,டிஎஸ்பி கலைகதிரவன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோசப் சுரேஷ், பேராசிரியர்கள் பொன்னுலிங்கம், கதிரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஐகோர்ட் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருபாகரன், ரஞ்சித், அதிமுக நர செயலாளர் விஜயபாண்டியன், மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.