Onetamil News Logo

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கலாச்சார சமத்துவப் பொங்கல் விழா

Onetamil News
 

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கலாச்சார சமத்துவப் பொங்கல் விழா



தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ;கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி கோவில்பட்டி ரோட்டரி சங்கம் பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்கம் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய கலாச்சார சமத்துவப் பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடைப்பெற்றது.
ஆண்டுதோறும் ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் 157வது பிறந்தநாளை முன்னிட்டு நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மாட்டுவண்டியில் வலம்வந்து சமத்துவப்பொங்கல் செய்தனர். பின்னர் பாடல்பாடி கோலாட்டம் கரகாட்டம் ஓயிலாட்டம் ஆடி பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். விழாவிற்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் செல்வி பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்க தலைவி ராஜேஸ்வரி தங்ககாளிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை மலர்க்கொடி அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு பாரம்பரிய கலாச்சார சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். விழாவில் ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் திருவைகுண்டம் சமுகதணிக்கை வட்டாரவள அலுவலர் முத்துமுருகன் பள்ளிக்குழு உறுப்பினர்கள் மணிக்கொடி சத்தியமூர்த்தி பொன்ராமலிங்கம் ராஜாஅமேரேந்திரன் பத்திரகாளியம்மன் கோவில் மாதர் சங்க உறுப்பினர்கள் கூடலிங்கம் சரோஜா லைலாபிராபாகரன் கமலா ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை கீதாமணி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை  ஆசிரியர்கள் சாந்தினி ஜோதி தொகுத்து வழங்கினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo