Onetamil News Logo

புல்வாமா தாக்குதல் - நினைவு தினம் அனுசரிப்பு ;சவலாப்பேரியில் சுப்பிரமணியன் நினைவு மண்டபம் திறப்பு - மக்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை

Onetamil News
 

புல்வாமா தாக்குதல் - நினைவு தினம் அனுசரிப்பு ;சவலாப்பேரியில் சுப்பிரமணியன் நினைவு மண்டபம் திறப்பு - மக்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 15 ;புல்வாமா தாக்குதல் - நினைவு தினம் அனுசரிப்பு - சவலாப்பேரியில் சுப்பிரமணியன் நினைவு மண்டபம் திறப்பு - மக்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இதில் தமிழகத்தினை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் சுப்பிரமணியன் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் சவலாப்பேரியாகும். அவரது சொந்த ஊரில் இன்று புல்வாமா தாக்குதல் முதலாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சுப்பிரமணியன் உடல் நல்லடக்கம் செய்யபட்ட இடத்தில், அவரது குடும்பத்தினர் சார்பில் நினைவு மண்டபம் கட்டபட்டு இருந்தது. இதனை கயத்தார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாணிக்கராஜா திறந்து வைத்து சுப்பிரமணியன் நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி, சுப்பிரமணியன் பெற்றோர், அவரது சகோதார் கிருஷ்ண மூர்த்தி மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள், அரசு அலுவலர்கள், பொது மக்கள் திரளான வந்து மலர் தூவிமரியாதை செய்தனர். கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
சுப்பிரமணியனின் சகோதாரர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் சுப்பிரமணியனின் உயிரிழப்பு தங்களது குடும்பத்திற்கு பெரும் இழப்பு என்றாலும், இந்த தேசத்திற்காக உயிரைநீத்து, எங்களது கிராமத்தினை உலகறிய செய்துள்ளார். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், காவல்துறை, இராணுவத்திற்கு வேலைக்கு சேருவதற்காக அந்த விண்ணப்பத்தினை சுப்பிரமணியன் உடல்நல்லடக்கம் செய்த இடத்தில் வைத்து வணங்கி செல்வது நெகிழ்ச்சியாக உள்ளதாகவும், காவல்துறை, இராணுவத்திற்கு இளைஞர்கள் செல்வதற்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி மைதானம் அமைக்க வேண்டும் என்பது தனது சகோதரனின் கனவு, அதனை நிறைவேற்றுதற்கு முயற்சி எடுக்கவுள்ளதாகவும், தனது சகோதரன் படித்த பள்ளி சீர்படுத்த தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo