Onetamil News Logo

இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 128 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்.

Onetamil News
 

இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 128 மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்.


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 13 ;தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 128 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.89 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று (13.02.2020) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, 128 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.89 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இவ்விழாவில்,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:-
கல்விக்கு கண் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்றால், கல்விக்கு உயிர் கொடுத்தவர்  புரட்சித்தலைவி அம்மா தான். 2001ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது பிரசார பணியில் ஈடுபட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு செல்லும் வழியில்,பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு 2, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு  நடந்து செல்வதை பார்த்து, தாம் முதலமைச்சராக பதவியேற்ற உடன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். 

 டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவ, மாணவியர்கள் பள்ளி வருவதை அதிகரித்தார்கள். இந்தியாவிலேயே முதன் முதலாக  புரட்சித்தலைவி அம்மா தான் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். தமிழகத்தை பார்த்து, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது. 
பள்ளி திறந்தவுடன் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் ஒரே அரசு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசுதான். 2011ம் ஆண்டு உலகிலேயே தமிழ்நாடு மாநிலத்தில்தான் காலத்திற்கேற்ப மாணவ, மாணவியர்கள் கல்வி கற்க விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்கள். பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து காலணி முதல்  கணிணி வரை 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டன்  அம்மா அவர்களை சந்தித்து பாராட்டினார்கள்.  அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.  புரட்சித்தலைவி அம்மா , வழியில் செயல்படும்  தமிழ்நாடு முதலமைச்சர் பொது தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் கிரேடு முறை கொண்டு வந்தார்கள்.
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் சிறந்த கல்வி கற்க வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வந்தார்கள். பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி ஆற்றலை மேம்படுத்திடும் வகையில் கல்வி தொலைக்காட்சியை கொண்டு வந்தார்கள்.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 1600 கூடுதல் மாணவர்கள் மருத்துவ படிப்பினை தொடர முடியும். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை 52 சதவிதம் எட்டியுள்ளது. தமிழக அரசு வழங்கும், அனைத்து திட்டங்களையும் மாணவ, மாணவிகள் பெற்று சிறப்பாக கல்வி பயின்று வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பெ.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், கயத்தார் வட்டாட்சியர் பாஸ்கரன், மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி பொது செயலாளர் காளிராஜ், கடம்பூர் பேருராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo