Onetamil News Logo

பெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு

Onetamil News
 

பெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு  


கழுகுமலை 2020 பிப்ரவரி 20 ;கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.   
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த அழகையா என்பவரது மகன் அழகுராஜன்(40). இவருக்கு திருமணமாகி பிச்சைக்கனி என்ற மனைவியும், அகிலேஷ், அஜய் என்ற 2 மகன்களும் உள்னர். இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் வழக்கமாக அருகில் இருக்கும் கழுகுமலைக்கு சென்று பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். இன்று வழக்கம் போல அழகுராஜன் கழுகுமலை பஜாரில் பொருள்களை வாங்கி விட்டு, ஊருக்கு தனது டூ விலரில் கிளம்பிய பொது, தீடீரென மர்ம நபர் ஒருவர், அழகுராஜனை தாக்கி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கழுகுமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அழகுராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டது உயிரிழந்த அழகுராஜன் உறவினர்கள் கழுகுமலை சங்கரன்கோவில் மெயின் சாலையில் தீடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக சென்ற போது, அழகுராஜன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுக்கையிட்டு முறையிட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து முற்றுக்கையிட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், டி.எஸ்.பி.ஜெபராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
 இந்த கொலை வழக்கு தொடர்பாக  பக்கத்து ஊரான கரட்டுமலையைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் மகேந்திரனுக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்தது. மகேந்திரன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அவர் கழுகுமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அழகுராஜிக்கு பிச்சைக்கனி என்ற மனைவியும், அஜய் (11), அகிலேஷ் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் அப்பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo