Onetamil News Logo

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும் திறந்து வைத்தது பாரத பிரதமர் ;அமைச்சர் புகழாராம்

Onetamil News
 

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும் திறந்து வைத்தது பாரத பிரதமர் ;அமைச்சர் புகழாராம்   


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 9 ; தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் பகுதியில் ரூ.42 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.
 தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பேரூராட்சி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா மற்றும் கழுகுமலை பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் துவக்க விழா இன்று (09.02.2019) நடைபெற்றது. இவ்விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  கலந்துகொண்டு கழுகுமலை பேரூராட்சியில் புனித மரியன்னை ஆரம்ப பள்ளியில்  தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.  மேலும், கழுகுமலை பேரூராட்சி குமாரபுரத்தில் பேருந்து பயணிகள் நிழற்குடையினை திறந்து வைத்தார். கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கரடிகுளத்தில் புதிய குடிநீர் திட்டத்தினையும், பணிக்கர்குளம் ஊராட்சி நாகலாபுரத்தில் சமுதாய நலக் கூடம், மயான சாலை மற்றும் பேவர் பிலாக் சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-
     புரட்சி தலைவி அம்மா அரசு அலுவலகங்களை தேடி மக்கள் செல்லும் நிலையை மாற்றி மக்களை தேடி அரசு அலுவலர்;கள் செல்லும் நிலையை ஏற்படுத்தினார்கள்.  அதன் தொடர்ச்சியாக மருத்துவ துறை மருத்துவர்கள் மக்களை தேடி வந்து சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  புரட்சி தலைவி அம்மா  தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும் வகையில் மின் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கி மின்மிகை மாநிலமாக மாற்றினார்கள். 2013ம் ஆண்டு முதல் மின்வெட்டு இல்லத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், கல்வி தரத்தினை உயாத்திடும் வகையில் கல்விக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாக்கினார்கள்.  மேலும், தமிழக மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு துணை சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தினார்கள். அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளையும் கொண்டு வந்தார்கள். மேலும், மருத்துவ துறையில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் மருத்துவர்களை நியமித்து சிறப்பான சிகிச்சை பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னையில் பல்நோக்கு மருத்துவமனையை உருவாக்கினார்கள். மேலும் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் டெல்லி எய்ம்ஸ்; மருத்துமனைக்கு இணையாக தமிழகத்தில் மருத்துவமனை கொண்டு வரவேண்டும் என்று பாரத பிரதமர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த மாதம் பாரத பிரதமர் அவர்கள் தமிழகத்தில் மதுரையில் ரூ.1,297 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.  மேலும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும் திறந்து வைத்தார்கள்.
 புரட்சி தலைவி அம்மா அவர்கள், தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். பெண்களுக்கு மகப்பேறு திட்டத்தில் தற்போது ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.  மேலும், சஞ்சீவி மருந்து திட்டம், சமுதாய வளைகாப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இன்று கழுகுமலை பேரூராட்சி குமாரபுரத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் பேருந்து பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது.  கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கரடிகுளத்தில் சி.ஆர்.காலனி மற்றும் அருகில் உள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பில் தரைமட்ட குடிநீர் தொட்டி அமைத்து நீரேற்று நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்படும்.  மேலும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் பணிக்கர்குளம் ஊராட்சி நாகலாபுரத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்து சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேவர்பிலாக தெரு அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் மயான சாலை அமைக்கும் பணிகளும் முடிக்;கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மக்களை காக்க சுகாதார துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய கடன் வழங்குவதற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் சிரமத்தை போக்க கயத்தாறை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் வட்டாட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அப்பணிகளும் நடைபெற்று வருகிறது.  புரட்சி தலைவி அம்மா அரசு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார்.
முன்னதாக மருத்துவ முகாமில் ஒரு தாய்மார்க்கு அம்மா குழந்தை பரிசு பெட்டகத்தையும், 4 நபர்களுக்கு வெளிநோயாளிகளுக்கான பதிவு அட்டையும், 2 பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளையும்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.போஸ்கோ ராஜா, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், முத்துக்குமார், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் ராமச்சந்திரன், வெண்டானம் கருப்புசாமி, முத்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo