Onetamil News Logo

இடப்பிரச்சினையில் சாலையில் நடுவே போடப்பட்ட கம்பி வேலி - போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கம்பி வேலி அகற்றம்

Onetamil News
 

இடப்பிரச்சினையில் சாலையில் நடுவே போடப்பட்ட கம்பி வேலி - போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கம்பி வேலி அகற்றம்


கோவில்பட்டி 2019 ஜுலை .9 ;கோவில்பட்டி அருகே இடப்பிரச்சினையில் சாலையில் நடுவே போடப்பட்ட கம்பி வேலி - போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கம்பி வேலி அகற்றம்
கோவில்பட்டி கிழக்கு பைபாஸ் சாலையில் இனாம் மணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருவில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையின் ஒரு பகுதியில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் நிர்மலா குடும்பம் வசித்து வருகிறது. சாலையின் மறு பகுதியில் 9 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகம் இரு தரப்பில் பேசி மருத்துவர் தரப்பில் 7 அடியும், மறு தரப்பில் 11 அடி தரப்பட்டது.
இதை வைத்து ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் சாலை அமைத்தது. இதில் நிர்மா தரப்பு மட்டும் அரசுக்கு இடத்தினை எழுத்தி கொடுத்துள்ளதாகவும் மறு தரப்பு எழுதி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மருத்துவர் தரப்பு தாங்கள் இனமாக கொடுத்த 7 அடிக்கு மேல் அதிகளவு இடத்தினை எடுத்து ஊராட்சி மன்ற நிர்வாகம் சாலை அமைத்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 7அடி போக மீதமுள்ள இடத்தினை தாங்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையெடுத்து அவர் சாலையில் 2 வரை தனது இடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார். இதற்கு மறுதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிர்மலா அமைத்துள்ள கம்பிவேலியை அகற்ற வலியுறுத்தி, அவர்களும் சாலையில் தீடீரென 150 அடி நீளத்திற்கு கம்பி வேலை அமைத்த காரணத்தினால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
சாலையின் நடுவே அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி நிர்மலா தரப்பினரும், நிர்மலா அமைத்துள்ள கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி மறு தரப்பினரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஊராட்சி மன்ற சாலையின் நடுவே கம்பி வேலி அமைக்கப்பட்டதால் மக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி, 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கமும் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி, அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மாணிக்கவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.அங்கு, கம்பி வேலி அமைத்தவர்களுடன் காவல் ஆய்வாளர் அய்யப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், பொதுப்பாதையை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்தது குற்றம். அதனால் உடனடியாக அதனை அகற்ற வேண்டும். இந்த இடம் தொடர்பாக இந்த தெருவில் உள்ளவர்கள் மாலைக்குள் வட்டாட்சியரிடம் வீட்டின் பத்திரத்தின் நகலை அளிக்க வேண்டும். ஜூலை 13-ம் தேதி வருவாய்த்துறை முன்னிலையில் அரசு அளவயரை கொண்டு நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார். இதையடுத்து கற்களும், கம்பி வேலியும் அகற்றப்பட்டன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo