Onetamil News Logo

திடீரென்று பஸ்ஸின் முன்புற ரெண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது ;சூளகிரி அருகே கோர விபத்தில் 3 பேர் பலி ;15 பேர் படுகாயம் 

Onetamil News
 

திடீரென்று பஸ்ஸின் முன்புற ரெண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது ;சூளகிரி அருகே கோர விபத்தில் 3 பேர் பலி ;15 பேர் படுகாயம் 


கிருஷ்ணகிரி  2019 ஜூன் 13 ; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது . இந்தப் பேருந்து சூளகிரி அருகே சூளகிரி பக்கமாக வந்த போது திடீரென்று பஸ்ஸின் முன்புற ரெண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது . இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி சாலையைக் கடக்க முயன்றனர் . அந்த நேரம் பின்னால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி புதிய அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது . சாலையை பயணிகள் கிடப்பதைப் பார்த்த அந்தப் பேருந்தின் டிரைவர் பஸ்சை சடன் பிரேக் போட்டு உடனடியாக நிறுத்தினார் . அந்த நேரம் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று புதிய அரசு பேருந்தின் மீது பயங்கரமாக பின்புறமாக மோதியது . மேலும் முன்னாள் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  மீதும் மோதி கவிழ்ந்தது . இதில் புதிய அரசு பேருந்தும் லாரியும் சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன .இந்த கோர விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு கொண்டுவரப்பட்டன .பலியான மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . காயமடைந்த 15 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .விபத்துக்குள்ளான மூன்று வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . இதற்காக ராட்சத கிரேன்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo