Onetamil News Logo

உலகிலேயே உயரமான இரும்பு மனிதர் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார் ;  குஜராத் நர்மதை நதிக்கரையில்  படேலுக்கு 182மீ உயர சிலை ; ரூ.1989 கோடி செலவு 

Onetamil News
 

உலகிலேயே உயரமான இரும்பு மனிதர் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார் ;  குஜராத் நர்மதை நதிக்கரையில்  படேலுக்கு 182மீ உயர சிலை ; ரூ.1989 கோடி செலவு 


  குஜராத்  2018 அக்டோபர் 31 ;குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் உலகிலேயே உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர சிலை ’இரும்பு மனிதர்’ என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு  நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே, 597 அடியில் (பீடம் உள்பட சிலையின் மொத்த அடி 787) பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 
 
சிதறிக்கிடந்த இந்திய மாநிலங்களை விடுதலைக்கு பின் ஒருங்கிணைத்ததில் பெரும்பங்கு ஆற்றியவர் சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு குஜராத் மாநிலம் நர்மதா நதியின் சர்தார் சரோவர் அணை அருகே 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவ மாநில அரசு முடிவு செய்துள்ளது. ரூ.1989 கோடி செலவில் உருவாக்கப்பட்ட  இந்த சிலையை படேலின் பிறந்த தினமான இன்று அக்டோபர் 31ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.. ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை, பிரதமர் மோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) உரையில், பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo