Onetamil News Logo

குலசேகரபட்டினம் அருகே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர்  கைது ;கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு

Onetamil News
 

குலசேகரபட்டினம் அருகே சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர்  கைது ;கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு


தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ; குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர்  கைது - எதிரியை கைது செய்த காவல் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியாண்டி தலைமையில் ஆறுமுகநேரி காவல் நிலைய முதல்நிலைக் காவலர்கள்  எழிழ்நிலவன், சொர்ணராஜ், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் இசக்கியப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று  ரோந்து சென்றபோது உடன்குடி தேரியூர் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சித்திரைசெல்வம்(29), மோகன்ராஜ் (27) ஆகியோர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக உடன்குடி தேரியூர் வடக்கு தெருவில் உள்ள தங்களது குடோனில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் குடோனை சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் 39 மூடைகள் மற்றும் 2 அட்டைப் பெட்டிகளில் இருப்பது தெரியவந்தது,  இது சம்மந்தமாக குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து ரூபாய் 4,00,000/- மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.மேற்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo