Onetamil News Logo

குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ; இன்று சூரசம்ஹாரம்   

Onetamil News
 

குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ; இன்று சூரசம்ஹாரம்   


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ; தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 17.10.2020 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் (26.10.2020) பத்தாம் திருவிழா நடைபெற உள்ள நிலையில்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்  இன்று சூரசம்ஹாரம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் வளாகம், கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் ஆகியவற்றை    பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆலோசனையின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி,  திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்  கண்ணபிரான், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர்  ராதிகா,  மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்னபூரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மீஹா ஆகியோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo