Onetamil News Logo

லாபம் திரைப்பட விமர்சனம்,நடிகை உதயா தூத்துக்குடியில் பேட்டி  

Onetamil News
 

லாபம் திரைப்பட விமர்சனம்,நடிகை உதயா தூத்துக்குடியில் பேட்டி  


தூத்துக்குடி 2021 செப் 10 ; தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லாபம். இந்த படத்தினை மறைந்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இயக்கியுள்ளார். இது தான் இவர் இயக்கிய கடைசி திரைப்படம்.
 
படத்தின் கதைக்களம் ‌:விவசாயத்தை சார்ந்து நடக்கக்கூடிய உலகளவிய வர்த்தக அரசியலை மையமாக கொண்டு தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைத்து சமூக சிந்தனையுடன் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களை கொண்டு இந்த படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். 
படத்தை பற்றிய அலசல் :நடிப்பு :நடிகர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன்,தூத்துக்குடி நடிகை உதயா என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இசை :டி இமானின் இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவு :இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
எடிட்டிங் :கணேஷ் குமார் மற்றும் அஹ்மத் இணைந்து படத்தினை கச்சிதமாக எடிட் செய்துள்ளனர்.                டத்தின் நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விஜய் சேதுபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, "சமூக அரசியல் த்ரில்லர் படமான 'லாபம்' நேரடியாக ஓடிடியில் வெளியாகாது. பிரம்மாண்டத் திரையரங்க வெளியீடாகவே இருக்கும்" எ
கொரோனா நெருக்கடி காரணமாக 6 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் 'சூரரைப் போற்று', 'பெண்குயின்', 'பொன்மகள் வந்தாள்' உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாக ஆரம்பித்தன. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், வெளியான படங்களைப் பார்க்கப் பெரிதாகக் கூட்டம் சேரவில்லை.விஜய் சேதுபதியின் முந்தைய படமும் ஓடிடியில் வெளியானதாலேயே 'லாபம்' திரைப்படத்தைச் சுற்றி அப்படியொரு வதந்தி பரவியது.விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இந்தப் படத்தில் உணவு அரசியல் உள்ளிட்ட புரட்சிகரமான விஷயங்களும் 'லாபம்' படத்தில் பேசப்பட்டுள்ளன.ந                                                                                                     
          ந டிகை உதயா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது... பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் ஜெகபதி பாபு. பல வருடங்களுக்கு பிறகு பெருவயல் கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி, ஜெகபதி பாவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.இதனால் கோபமடையும் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார். அதே சமயம் விஜய் சேதுபதி கிராம மக்களை திரட்டி கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இறுதியில் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழித்தாரா? விஜய் சேதுபதி பல வருடங்கள் கழித்து ஊருக்கு வர என்ன காரணம்? கூட்டு பண்ணை திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விவசாய சங்க தலைவராக வலம் வருகிறார். விவசாயத்தின் நன்மை, விவசாயிகள் பணம் சம்பாதிப்பது பற்றி படம் முழுக்க பேசுகிறார். ஒரு கட்டத்தில் அதிகம் பேசுவது போல் தோன்றுகிறது. 
நடனக் கலைஞராக வரும் ஸ்ருதி ஹாசன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியை காதலிப்பது, அவருக்கு உதவுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். காமெடியை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஜெகபதி பாபு வழக்கமான வில்லனாக வந்து செல்கிறார். விஜய் சேதுபதி நண்பர்களாக வரும் கலையரசன், டேனி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். 
விவசாயத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். விலை நிலங்கள், விவசாயத்தின் நன்மை, விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால், சொன்ன விதம் குழப்பமாக இருக்கிறது. இப்படத்திலும் விவசாயம், கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி இருப்பதால், பழைய படங்களின் தாக்கம் ஆங்காங்கே வந்து செல்கிறது. டி இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. 
மொத்தத்தில் 'லாபம்' அதிக லாபம் இல்லை.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo