Onetamil News Logo

தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 

Onetamil News
 

தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 13 ;மேலச்சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
     தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் இந்துநாடார் உறவினர் முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 
      விழாவை முன்னிட்டு 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் நடைபெறுகிறது. நேற்று 7ம் நாள் திருவிழாவில் அம்மன் மாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தாள். இதில் உலக மக்கள் நன்மை வேண்டி கொடிய கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பற்றி, எல்லா வகை செல்வங்கள், தொழில் வளம், மன அமைதி வேண்டி அரசு விதிமுறைக்குட்பட்டு 301 சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
     விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சித்திரைவிஜயன், பொருளாளர் முருகேசன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் லிங்கராஜ், மாரியப்பன், வாசு, சுந்தரகுமார், காசிலிங்கம், புதுராஜா, ஈஸ்வரன், பால்ராஜ், பாபுஜி, மணி, தேன்ராஜ், பொன்னுதுரை, கதிரேஷ், மாரிமுத்து, கார்த்தீசன், ஆகியோர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo