Onetamil News Logo

திருமணம் முடிந்து 7 மாதங்கள் கடந்த புது மாப்பிள்ளை  வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து பலி 

Onetamil News
 

திருமணம் முடிந்து 7 மாதங்கள் கடந்த புது மாப்பிள்ளை  வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து பலி 



நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் மணி. இவர் செம்பூர் திலக் நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் (வயது27). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் கணவர், மனைவி இருவரும் நவிமும்பை கன்சோலியில் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கார்த்திக் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் குளியலறையில் வழுக்கி விழுந்து உள்ளார்.
சத்தம் கேட்டு அவரது மனைவி ஓடி வந்தார். கணவர் குளியலறைக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து பதறி போன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கார்த்திக்கின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த கன்சோலி போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo