Onetamil News Logo

லெட்டர் பேடு கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன ; லெட்டர் பேடு கட்சிகளுக்கு மக்கள் மீது திடீர் கரிசனம் - வாக்குகளைப் பெற கப்பம் கட்டும் அரசியல் கட்சிகள் ;நீதிபதிகள் காட்டம்

Onetamil News
 

லெட்டர் பேடு கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன ; லெட்டர் பேடு கட்சிகளுக்கு மக்கள் மீது திடீர் கரிசனம் - வாக்குகளைப் பெற கப்பம் கட்டும் அரசியல் கட்சிகள் ;நீதிபதிகள் காட்டம்


மதுரை 2020 அக்டோபர் 13 ;குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடக்க அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.லெட்டர் பேடு கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன- நீதிபதிகள் காட்டம் உயர்நீதி மன்ற மதுரை கிளை ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சையை சேர்ந்த ஒருவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்போது அவர் தான் ஒரு கட்சியை சேர்ந்தவர் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் வந்தது.அப்போது கட்சி பெயரை குறிப்பிட்டிருந்தால் கடும் கோபம் அடைந்தனர். மேலும் ‘‘புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?. குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும்.தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் எதிர்தர மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு பதில் அளிக்க வேண்டும். லெட்டர் பேடு அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன’’ எனத் தெரிவித்தனர்.                                                                                                                                                                        
தேர்தல் வந்துவிட்டாலே திடீரென முளைத்து திடீரென காணாமல் போகும் காளான் கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான். கிழியாத பேனரையும் தேய்ந்த போன லெட்டர் பேடையும் மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு அகில இந்திய அளவில் தங்கள் கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பு குறித்து புள்ளிவிவரத்துடன் பொளந்து கட்டுவார்கள். திண்டுக்கல் பகுதியில் இப்போது அந்தக் கண்கொள்ளாக் காட்சிகள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன.திடீர் கட்சிகளின் பெயர்களைச் சொன்னால் ’உங்களால்தான் நாற்பது தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றிவாய்ப்பு கெட்டுப்போனது’ என்று இழப்பீடு கேட்பார்கள். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கடந்த இரு வாரமாக லெட்டர் பேடு கட்சிகள் ரவுண்டு கட்டி அடிக்கின்றன.திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு போராட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை லெட்டர் பேடு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்துபவைதான். இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை.,திடீரென கிளம்பி வந்து, ‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்’ என்று முழங்குவார்கள்.பொதுமக்கள் மீது இவர்களுக்கு வந்திருக்கும் திடீர் கரிசனம் குறித்து ஆளும் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, “இவங்க சொல்றத இவங்க பொண்டாட்டி புள்ளைகளே கேட்காது. ஆனா, ‘எங்களுக்கு பின்னால் லட்சோப லட்சம் பேர் இருக்கிறார்கள்’ என்று கூசாம பொய் சொல்லுவாங்க. இவங்களால ஓட்டு வாங்கிக் குடுக்க முடியாது.ஆனா, எசகுபிசகா எதையாச்சும் கெளப்பிவிட்டு, விழுகுற ஓட்டையும் கெடுத்துவிட்டுருவாங்க. அதனாலதான் தேர்தல் நேரத்துல இவங்களுக்கும் இரைய போட்டு கூடவே வைச்சுக்க வேண்டியிருக்கு’’ என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo