Onetamil News Logo

மின் வாரிய இணையதளத்தில் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம் - மின் நுகர்வோர் அவதி

Onetamil News
 

மின் வாரிய இணையதளத்தில் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம் - மின் நுகர்வோர் அவதி


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
       இது குறித்து எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கர் கூறியதாவது. மின் கட்டணம் செலுத்த கடைசி நாளன்று மின் நுகர்வோரின் ஆதார் எண் இணைக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு அறிவிக்கப்படாத நிலையில், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்று நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. மின் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மின் வாரிய அலுவலகத்தில் போர்ட்டல் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும் போது இத்தகைய நிலை ஏற்படவில்லை. ஆனால், தனியாக இணையதளம் மூலமாக மின் கட்டணம் செலுத்தும்போது, ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளது. அதற்கேற்ப இணையதள பக்கம் வடிவமைக்கப்படவில்லை. அதனால் இன்டர்நெட் மையத்தில் ஆதார் எண்ணை இணைக்காமல் மின் வாரிய இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. கட்டணம் செலுத்த முற்படும்போது, தானாகவே ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங்க் வந்து விடுகிறது. இதில், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடிகிறது. ஆனால் செல்போனிலிருந்து யூபிஐ மூலம் கட்டணம் செலுத்த முடிகிறது.
ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது அதிலுள்ள சாதக பாதகங்களை கருத்திற் கொண்டு போதிய கால அவகாசத்தை மின்நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo