தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம்
சென்னை 2018 நவம்பர் 9 ;நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அந்தப் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைக்குள் சர்கார் சிக்கியது. நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வந்ததைத் தொடர்ந்து பல இடங்களில் அதுபோன்ற போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
சர்கார் படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்