Onetamil News Logo

டெல்லி ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம் 

Onetamil News
 

டெல்லி ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம் 


மதுரை 2020 ஜனவரி 4 ;டெல்லி ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சமம் குடிமக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது..                                                                                               
இதுகுறித்து சமம் குடிமக்கள் இயக்கம்,மாநிலத்தலைவர் வழக்கறிஞர்.சி.சே.இராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....டெல்லி ஜவர்ஹர்லால்பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது நடந்த கொடூர தாக்குதல் குறித்து சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர்.சி.சே.ராசன் தன்னுடைய அறிக்கையில்  முகமூடி அணிந்த வெளி நபர்கள் நூற்றுக்கணக்கணக்காணோர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து பெரிய தாக்குதலையும், வன்முறையையும் கட்டவிழ்த்துள்ளனர். மாணவர் தலைவர்களையும், விடுதிக்குள் மாணவிகளையும், பேராசிரியர்களையும் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்  இரத்தம் சொட்ட,சொட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி காவல்துறை உள்ளே சென்று அவர்களை விரட்டாமல் வெளிவாயிலை இழுத்து மூடி, தாக்குதல் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுபோல செயல்பட்டுள்னர். இந்த கொலை வெறித்தாக்குதலின் பின்னணியில் பாஜகவின் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பு இருந்துள்ளது. 
இந்த தாக்குதலை கேள்விப்பட்டு சுயஆட்சி இந்தியாவின் அகில இந்திய தலைவர் பேரா.யோகேந்திர யாதவ் அங்குச் செல்ல முயன்றபோது அங்கிருந்த ஏ.பி.வி.பி.  மற்றும் பஜ்ரங்தள் குண்டர்களால் காவல்துறை முன்னிலையிலேயே தாக்கப்பட்டுள்ளார்.. பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த அராஜக செயல் என்பது   வன்மையாக கண்டிக்கதக்கது.
நடந்த இந்த வன்முறைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகமும், பிஜேபி அரசும் பொறுப்பேற்க வேண்டும். காயம் அடைந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உயர்தர  மருத்துவ உதவி அளிக்க வேண்டும்.
 முகமூடி அணிந்த குண்டர்கள் ஜே.என்.யுவில் மாணவர்கள் தங்கியுள்ள  விடுதிகளின் பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். ஜே.என்.யு வாயிற்கதவுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் கொடூரமான ஆயுதங்களோடு வெளியாட்கள் வளாகத்திற்குள் நுழைந்ததைப் பார்க்கும் போது நிர்வாகத்தின் ஒத்துழைப்போடுதான் இந்தத் தாக்குதலை ஏபிவிபி நடத்தியிருக்க முடியும்.
ஜே.என்.யுவில் கட்டண உயர்வுக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாணவ மாணவியர் தொடர்ந்து போராடி  வரும் வேளையில்  ஜே.என்.யு. நிர்வாகம்  மதவாத சக்திகளின் துணையுடன்  கொலைவெறித் தாக்குதலை நடத்திருப்பதை இதன்மூலம் உறுதி செய்யமுடிகிறது.. 
பல்கலைக்கழகங்களையும், மாணவர்களையும்,பேராசிரியர்களையும் குறிவைத்து குண்டர்கள் கொண்டு தாக்குவது என்பது ஜனநாயகத்திற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் ஆபத்தானது. அதனால் தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க  வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo