Onetamil News Logo

அச்சமும் வேண்டாம்.. அலட்சியமும் வேண்டாம் ;கொரோனா வைரஸ்  தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்

Onetamil News
 

அச்சமும் வேண்டாம்.. அலட்சியமும் வேண்டாம்;கொரோனா வைரஸ்  தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்


 மதுரை 2020 மார்ச் வெள்ளி 20; கொரோனா வைரஸ்  தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரமானது, நாட்டைக் காப்போம் மதுரை மன்ற அமைப்பின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்  நடைப்பெற்றது.
விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இவ் அமைப்பின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் சி.சே.ராஜன், தமிழரசன், செல்வகோமதி ஆகியோர் முன்னின்று நடத்தினர். தமிழ்நாடு இறையியல் கல்லூரி முன்னாள் முதல்வர் தியான்சன் கார், முனைவர். அலோசியஸ் இருதயம், வழக்கறிஞர். வின்சென்ட் மனோகரன், வழக்கறிஞர். அகல்யா ,பால்மைக், அருட்சகோதிரி.மரியா உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வை வழங்கினர்.
மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலமும், செய்முறை மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும் எனவும், ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கை வலது விரல்களை இடது விரவிடுக்களில் நுழைத்து மாறிமாறி தேய்க்க வேண்டும் என்றும்  கட்டைவிரலைச் சுற்றி இரு கைகளையும் தேய்க்க வேண்டும் என்றும் பிரசாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது. கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் முகத்தை தொடும் போது இந் நோய் தொற்று ஏற்படுகிறது என்றும் எச்சரிக்கப்பட்டது. நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் அதே நேரத்தில் அலச்சியப்படுத்தவும் வேண்டாம் என மக்களிடம்  கூறி விழிப்புணர்வு ஏர்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்த அமைப்பினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo