Onetamil News Logo

சமம் குடிமக்கள் இயக்கத்தின் கள ஆய்வு அறிக்கை எதிரொலி ;பளியர் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கியது அரசு சமம் குடிமக்கள் இயக்க மாநிலத்தலைவர் சி.சே.இராசன் பேட்டி

Onetamil News
 

சமம் குடிமக்கள் இயக்கத்தின் கள ஆய்வு அறிக்கை எதிரொலி ;பளியர் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கியது அரசு சமம் குடிமக்கள் இயக்க மாநிலத்தலைவர் சி.சே.இராசன் பேட்டி


மதுரை 2020 ஆகஸ்ட் 13 ;சமம் குடிமக்கள் இயக்கமானது 2019 டிசம்பர் 10முதல் 2020 மார்ச் 10 வரை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - பழனி மலையில் வசிக்கும் பளியர் பழங்குடியினர் சமூக வாழ்வு நிலை குறித்து ஆய்வு மேற்க்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கையை உலக பழங்குடியினர் தினமான 2020 ஆகஸ்ட் 9 அன்று வெளியிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் பழனி தாலுகாவில் 30க்கு மேற்பட்ட கிராமங்களில் பளியர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். சமம் குடிமக்கள் இயக்கமானது பழனி தாலுகாவில் மண்திட்டு, குதிரையாறு, பொந்துப்புளி, சண்முகம் பாறை, பாலாறு, குட்டிக்கரடு, காந்தி நகர் ஆகிய கிராமங்களிலும் கொடைக்கானல் தாலுகாவில் சவரிக்காடு, கடமன்ராவ், கோம்பைகாடு, செம்மரான்குளம், பட்டியக்காடு, கருவேலன்பட்டி, பூதமலை, கடைசிகாடு, குரவானச்சிஓடை,கோரம்கொம்பு, ,பாரதி அண்ணாநகர், சாமக்காடுகாலணி, தாமரைகுளம், ஜே.ஜே.நகர், பெருங்காடு திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் குளவிக்கரை உள்ளிட்ட 23 பளியர் பழங்குடி கிராமங்களில் ஆய்வு செய்தது. மொத்தம் 2612 உள்ளடக்கிய 714 குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2612 பேரில் சாதி சான்றிதழ் இல்லாமல் 1023 பேர் உள்ளனர். இதில் 546 பேர் சாதி சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ .மற்றும் மாவட்ட ஆட்சி தவைவரிடம் விண்ணப்பம் அளித்து ஒராண்டுகளுக்கு மேலாகியும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. இதில் 208 பேர் பள்ளியில் படிக்கும் மாணவர்களாக உள்ளனர் அவர்களின் மேல்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சாதி சான்றிதழ் இல்லாததினால் அரசு உதவி தொகை மற்றும் தங்கி படிக்க அரசு விடுதி போன்றவை கிடைக்க முடியவில்லை என்பதை அறிய முடிந்தது..
அதேபோல் வீட்டுபட்டா தேவைப்படுவோர் 321பேர், வீட்டுமனை தேவைப்படுவோர் 95 பேர், விவசாய நில பட்டா தேவைப்படுவோர் 249 பேர், 248 பழைய தொகுப்பு வீடுகள் சீரமைக்க வேண்டியது 232 வீடுகள், மின்சாரம் தேவையான வீடுகள் 406, சாலை வசதி உடனடியாக தேவை 3 கிராமங்கள், பேருந்து வசதி தேவை12 கிராமங்கள், 215பேருக்கு குடும்ப அட்டை இல்லை, 416 பேருக்கு ஆதார் அட்டை இல்லை, நலவாரிய அட்டை 417 பேருக்கு இல்லை, மாற்றுத்திறனாளி அட்டை 10 பேருக்கு தேவை ,முதியோர் உதவி தொகையானது 92 பேருக்கு கிடைக்கவில்லை. NREGA திட்டத்தின் கீழ் 689 பேருக்கு வேலை கிடைக்கவில்லை போன்ற தகவல்கள் ஆய்வின் போது தெரிய வந்தது.
இந்த களஆய்வு அறிக்கையானது வெளியானதிற்கு பின்பு ஆகஸ்ட் 12 ஆம்தேதி கொடைக்கானல் தாலுகாவில் உள்ள செம்பரான்குளம் ,பட்டியக்காடு,  பூதமலை ஆகிய கிராமங்களுக்கு அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று பள்ளி குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதே போன்று கோரம் கொம்பு கிராமத்திலும் குழந்தைகளுக்குத் 13 ஆம் தேதி சாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர். கருவேலம்பட்டி கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் வடபழஞ்சி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மக்களை வரவழைத்திருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
அரசு அனைவருக்கும் சாதி சான்றிதழ் உட்பட அனைத்து நலத்திட்டங்களையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பதே சமம் குடிமக்கள் இயக்கத்தின் கோரிக்கை. சாதி சான்றிதழை கிராமங்களுக்கு வழங்கும் முன்முயற்சியை இப்போது எடுத்துள்ள தமிழக அரசுக்கு சமம் குடிமக்கள் இயக்கம்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கள ஆய்விற்கு தன்னார்வமாக துணைப்புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
கள ஆய்வு அறிக்கையில் உள்ள தகவல்களை, புள்ளி விவரங்களை  மக்கள் கோரிக்கையாக  வெளியிட்ட இந்து ஆங்கிலம்,இந்து தமிழ்,தக்கதிர்,மாலைை முரசு,வணக்கம் இந்தியா, மாலை முரசு,மாலை நியூஸ், onetamilnews, Daily hunt, 24news   உட்பட அனைத்து ஊடகங்களுக்கும் இந்த செய்தியை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இணைந்து பயணிப்போம். இயலாததை சாதிக்க.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo