Onetamil News Logo

குடிநோயாளிகள் பெருக்கம் ;குடும்பத்தினர் கலக்கம் ;ஆட்சியாளர்கள் மாற்றி யோசிப்பார்களா?  

Onetamil News
 

குடிநோயாளிகள் பெருக்கம் ;குடும்பத்தினர் கலக்கம் ;ஆட்சியாளர்கள் மாற்றி யோசிப்பார்களா?  



மதுரை 2019 மார்ச் 14 ;மதுவால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து இளம் விதவைகளாக இருக்கும் பெண்கள் தங்கள் சோகமான அனுபவங்களை பகிர்த்துக்கொண்டனர் 
தமிழகத்தில் குடிநோயாளிகள் மற்றும் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள். அத்தோடு பதிமூன்று வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் மதுபோதைக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் எதிர்காலத் தமிழகம் ஆரோக்கியமற்ற, பண்புகளையும் ஒழுக்கத்தினையும் தொலைத்த தமிழகமாக மாறும் அபாயம் உள்ளது. அதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்திடவேண்டும். குடியால் பாதிக்கப்பட்ட மது நோயாளிகளுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கப்படவேண்டும். சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்.குடிநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் மறுவாழ்வுக்கென தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். காரணம், மதுக்கடைகள் அரசு மூலமாகவே செயல்படுகின்றன. டாஸ்மாக் கடையிலுள்ள மதுபானங்கள் சட்டத்துக்குப் புறம்பாக சிறிய பெட்டிக்கடைகளிலும், வீடுகளிலும் விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மாவட்ட ஆட்சியர் மாதம்தோறும் இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்திடவேண்டும். 
தமிழகத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பார்களையும் அனுமதியின்றி நடக்கும் பார்களும் உடனடியாக மூடப்படவேண்டும். அரசியல்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என உறுதியளிக்கவேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மதுபானக்கடைகள் மூடப்படவேண்டும்.
குடியால் மரணமடைந்த இளைஞர்களின் இளம் விதவைகளின் மறுவாழ்வுக்காக அரசு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திடவேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு, மற்றும் விதவையருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை அரசு தவிர்க்கவேண்டும். இதனால், அதிகாரிகள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். 
அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்போது மதுபானக்கடைகளில் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்கவேண்டும். 
மதுக்கடைகளை மூடுவதற்கான அதிகாரம் கிராமசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். கிராமசபையில் பங்கேற்கும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுக்கு ஏற்ப கடைகள் மூடுவதற்கான சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களுக்கு  பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo