Onetamil News Logo

இலங்கையில் நடந்த பெரிய தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கு மனித நேயந்துடன் ஆதரவு அளிப்போம் ;சமம் குடி மக்கள் இயக்கம் வேண்டுக்கோள் 

Onetamil News
 

இலங்கையில் நடந்த பெரிய தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கு மனித நேயந்துடன் ஆதரவு அளிப்போம்;சமம் குடி மக்கள் இயக்கம் வேண்டுக்கோள்  



மதுரை  2019 ஏப்ரல் 22 ; இலங்கையில் நடந்த பெரிய தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கு மனித நேயந்துடன் ஆதரவு அளிப்போம்.சமம் குடி மக்கள் இயக்கம் வேண்டுக்கோள் விடப்பட்டுள்ளது.                                                                                சமம் குடிமக்கள் இயக்கம்,மாநில தலைவர்,வழக்கறிஞர்.சி.சே.இராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
இலங்கையில் அடுத்தடுத்து 8 பகுதிகளில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததால். 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர். இதில் பெருவாரியான தமிழர்கள் உயிரிழந்ததாக அறியமுடிகிறது.
"இதுவரை 207 பேர் இறந்துள்ளனர்.; 405 பேர் படுகாயமடைந்துள்ளனர் என இலங்கை அரசு கூறுகிறது. இச் சம்பவத்தில் தற்கொலைப் படையினர் ஈடுப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன எனவும், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன எனவும்  இலங்கை அரசு கூறுகிறது.
இந்த குண்டுவெடிப்புகளில், பல  வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை  அறிய முடிகிறது. .பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்பதையும் வேதனையோடு  அறிய முடிகிறது.
 
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு பூனித செபாஸ்டியர் தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு என எட்டு  இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இந்தத் தாக்குதலைப் பார்க்க முடிகிறது.
இலங்கை நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பதற்றத்திற்குள் மக்களை வைத்திருக்கும் வகையில்   நடத்தப்பட்டுள்ள இவ்வெடிகுண்டுத் தாக்குதலானது வன்மையாகக் கண்டிக்கதக்கது 
குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்களில் வழிப்பாடு நடத்தி கொண்டிருந்த வேளையில் மக்களை கொலை செய்திருப்பது  பெரும் வேதனையளிக்கிறது. மதச் சுதந்திரங்களைப் பறித்து, மத உணர்வுகளைக் காயப்படுத்தி மக்களை கொன்ற இத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு  தண்டிக்கப்பட வேண்டும். இந்த வன்முறையில் உயிரிழந்த,பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் சமம் குடிமக்கள் இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிளது
 
இனம், மதம் ஆகிய பாகுபாடுகளை கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தம் கொடுக்க திரண்டு வருகின்றனர் என்பதை அறியும் பொழுது மக்கள் மனித நேயத்துடன், சகோதர உணர்வுடன் இலங்கையில் வாழ்வதையும்  பெருமையுடன் பார்த்து வந்த நிலையில்   நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை நமக்கு அளிக்கின்றன.
மதவாத சக்திகள் தான் திட்டமிட்டு இது போன்ற வன்முறை செயலை செய்திருக்க முடியும்  என்பதை நாம் ஊகிக்க முடிகிறது. அதேநேரத்தில், இலங்கை உள்நாட்டு போரின் போது பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற குற்றசாட்டுகள் முறையாக விசாரித்து குற்றம் விளைவித்த அரசின் மீதும், அதற்கு துணை நின்றவர்கள்  மீதும்  முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தால் ஆளும் இலங்கை அரசின் மேல் நமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். உள்நாட்டு போரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தும் ,அதனை விசாரிக்க வேண்டும் என ஐ..நா மன்றம் தீர்மானம் நிறை வேற்றிய போதிலும் முறையாக போர் விசாரணை 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடங்கப்படாத சூழலை தான் பார்க்கிறோம். .இது இப்போது ஆளும் இலங்கை ஆட்சியாளர்களின்  மேல் நம்பிக்கை இல்லாத சூழலைத்தான் நமக்கு ஏற்ப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நம் ஆழ்ந்த  இரங்கல்களையும் மனித நேயத்தையும், அன்பையும்  வெளிப்படுத்துவோம். பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயிரிழந்த அப்பாவி ஆன்மாக்களுக்கு அமைதி கிடைக்கட்டும். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் . எந்தப் பேரினவாதம் இந்தத் தீமையைச் செய்துள்ளதென உலக நாடுகளின் ஒன்றியம்(ஐ.நா) ஆய்வு நடத்தினால்தான் உண்மை வெளிவரும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo