Onetamil News Logo

ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு சமம்குடிமக்கள் இயக்கம் நடத்திய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Onetamil News
 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு சமம்குடிமக்கள் இயக்கம் நடத்திய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


மதுரை 2019 மே 22 ;துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஓராண்டாகியும் சட்டரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.தூத்துக்குடி மக்களின் நலன்கருதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிசட்டம் உடனடியாக இயற்றவேண்டும். ;சமம்குடிமக்கள் இயக்கம் கோரிக்கை.விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு சமம்குடிமக்கள் இயக்கம் சார்பில் சமம்அலுவலகத்தில் மாநிலத் தலைவர் வழக்கறிஞர். சி.சே.இராசன் தலைமையில் நடைப்பெற்றது.
                                                                                                                          சமம்குடிமக்கள் இயக்க தூத்துக்குடி மடண்டல தலைவர் ஜான் பி.ராயன் கலந்துக்கொண்டு சென்ற ஆண்டு மே22 ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நினைவுக்கூறினார்.அவர் கூறும் போது தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக்காக தான் பார்க்க வேண்டும். வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாகவே அரசு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. தூத்துக்குடி யில்  எதை செய்தாலும் , தீவிரவாதிகளை கண்காணிப்பது  போல் கண்காணித்து அழைத்து காவல்துறையை வைத்து எச்சரிக்கிறார்கள் .அச்சம் கலந்த சூழலை  உருவாக்குகிறார்கள். இறந்தவர்களுக்கு அழுவதற்கு கூட நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. நீதிமன்றமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.தூத்துக்குடி கடந்த ஓராண்டாகவே அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக உள்ளது என்றார்.
தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும்  அஞ்சலி செலுத்தியப்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*சுதந்திரநாட்டில் குடிமக்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என முடிவெடுக்கும் அதிகாரம் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உள்ளது. அதனை புரிந்துக்கொண்டு அரசுகள் செயல்படவேண்டும்.அதன் அடிப்படையில் கடந்த கால்நூற்றாண்டுகளாக நில்த்தையும், நீரையும், காற்றையும் மாசுப்படுத்திக் கொண்டு ஆயிரகணக்கான மக்களின் உடல்நலத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் வேதாந்நா நிறுவனத்தின் தாமிர உருக்கு ஆலையை தனி சிறப்பு சட்டம் இயற்றி உடனே அகற்ற வேண்டும்.
*துப்பாக்கி சூடு நடத்தி 15உயிர்களை பறித்த காவல்துறை மற்றும் அதற்கு காரணமாக இருந்த  அரசு அதிகாரிகள் மேல் கொலைகுற்றம் பதிவு செய்து சட்டரீதியாக தண்டிக்க வேண்டும்.காலம் தாழ்த்தாமல் நீதி வழங்கபட வேண்டும்.
*நீதிபதி.அருணா செகதீசன் ஆணைய விசாரணை,சி.பி.ஐ.விசாரணை ஓராண்டாகியும் இன்னும் முடியாமல் காலம்தாழ்த்தப்பட்டு வருவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பலனையும் அளிக்காமல் உள்ளது.அதனால் குற்றம் செய்த காவல்துறை மற்றும் அதிகாரிகள் மேல் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் நலன்கருதி  விரைந்து அறிக்கை கொண்டு வர வேண்டும்.
*பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட முடிவில் சமம்குடிமக்கள் இயக்க மாநில பொது செயலாளர்.சண்முகவேலு நன்றி கூறினார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo