Onetamil News Logo

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு

Onetamil News
 

உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு


மதுரை 2019 டிசம்பர் 9 ;உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்களிடையே துண்டு பிரசுரங்கள், பயிற்சி வகுப்புகள் போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று "மக்களுக்கான மாற்று அரசியல் களம்" கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
"உள்ளாட்சியில் நாம்" என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமூகச் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு, உள்ளாட்சி என்றால் என்ன, உள்ளாட்சித் தேர்தல், அது நடைபெறும் முறை, பதிவு செய்யவேண்டிய வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை, தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தொடங்கப்படவேண்டிய வேலைகள், வாக்குப்பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின்னர் வேட்பாளரின் பொறுப்பு, புகார் தொடர்பாக யாரைத் தொடர்பு கொள்வது என்பது போன்ற விஷயங்களை உள்ளாட்சி நடைமுறை பயிற்சியாளர் எம்.எல்.தாஸ் விளக்கிக் கூறினார். தேர்தலில் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள், யார் தேர்தலுக்கு நிற்கலாம், உள்ளாட்சிகளுக்கு உரிய அதிகாரங்கள் எவை என்பன குறித்து உள்ளாட்சி நடைமுறை பயிற்சியாளர் சகாயம் விளக்கினார். தேர்தல் நடைபெறாததால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பத்திரிகையாளர் ப.திருமலை பேசினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இவர்கள் பதிலளித்தார்கள்.
பின்னர் நடந்த கலந்துரையாடலுக்கு அன்னம் பத்திரிகை ஆசிரியர் முனைவர் எக்ஸ். டி.  செல்வராஜ் தலைமை வகித்தார். சுய ஆட்சி இந்தியா அமைப்பின் பாலகிருஷ்ணன், லில்லி, தமிழ்தேச மக்கள் முன்னணி மேரி, தமிழக பெண்கள் இணைப்புக் குழு காமேசுவரி, தேன்சுடர் பெண்கள் இயக்கம் முருகேசன், விவசாய சங்கத் தலைவர் நிக்கோலஸ், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, அருட்பணி பாரிவளன் மற்றும் தலித் பெண்கள் கூட்டமைப்பு, தமிழ்மாநில பெண்கள் இயக்கம், தமிழக பெண்கள் கூட்டமைப்பு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்வினை மக்களுக்கான மாற்று அரசியல் களம் தமிழக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே. ராசன் நெறிப்படுத்தினார். மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பால் பிரிட்டோ  தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கேற்பை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரம் மற்றும் உள்ளாட்சி குறித்து மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது என்றும், பிரசாரம் மேற்கொள்வது என்றும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo